Friday 23rd of September 2011நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபையின் 66 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதிக்கு ஐ.நா. பொதுச் செயலருக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை பான் கீ மூன் வெளியிட்ட பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரைச் சந்திக்கவுள்ளார்.
அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த வாரம் சந்திக்கவுள்ளதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நடத்தும் பேச்சுக்கள், மீள்குடியமர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மன்மோகன்சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ஷ விளக்கமளிப்பார் என்றும் புதுடில்லித் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
No comments:
Post a Comment