Wednesday, September 14, 2011

ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் தொடர்பிலான செய்தியை வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பு!

Wednesday,September 14,2011
ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜகத் தயஸை மீள அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

இரண்டு ஆண்டு சேவைக் காலம் பூர்த்தியானதன் காரணமாகவே ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர் நாடு திரும்பவுள்ளதாக அமைச்சின் தொடர்பாடல் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் சரத் திசாநாயக்க கூறியுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜகத் தயஸ் நாடு திரும்பியதன் பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு ஒரு வாரத்துக்குள் வேறொருவர் பெயரிடப்படுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment