Monday, September 19, 2011

கூகுள், யூ டியூப்'புக்கு தடை: பாகிஸ்தான் அரசு மிரட்டல்!

Monday, September 19, 2011
இஸ்லாமாபாத்:பயங்கரவாத செயல்கள், குற்றங்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில், கூகுள் மற்றும் யூ டியூப் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்படும்' என, பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள், இணையதளங்கள் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. நாட்டில் நடக்கும் குற்றங்கள், பயங்கரவாதச் செயல்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் கூகுள், யூ டியூப் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என, அரசு வற்புறுத்தி வருகிறது.
இவ்வாறு மாலிக் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கான கூகுள் தலைமை நிர்வாகிக்கு, மாலிக் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதச் செயல்கள், குற்றங்கள் என்ன என்பதை மாலிக் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment