Monday, September 5, 2011

ரத்வத்தையின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது!

Monday,September,05,2011
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த நீதிமன்றில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு அனுருத்த ரத்வத்த கோரிக்கை விடுத்துள்ளார். 33 மில்லியன் ரூபா பணமும், 1.25 மில்லியன் அசையா சொத்துக்களும் எவ்வித கணக்குகளும் இன்றி அனுருத்த ரத்வத்த வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனுருத்த ரத்வத்தவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரினார் எனினும், இந்தக் கோரிக்கையை நீதவான் சுனில் ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் 21ம் திகதி வழக்கு விசாரணை மீள நடைபெறவுள்ளது. 1997ம் ஆண்டு 2002ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அனுருத்த ரத்வத்த சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்துள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

எவ்வாறெனினும், அனுருத்த ரத்வத்தவிற்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment