Monday, September 5, 2011

ஜப்பானில் சூறாவளி தாக்குதல் : 20 பேர் பலி!.

Monday,September,05,2011
டோக்கியோ: சுனாமி தாக்குதலில் இருந்து இன்னும் மீளாத நிலையில் உள்ள ஜப்பானில் சூறாவளி தாக்கியதில் 20 பேர் பலியாகி உள்ளனர். ஐம்பதுக்கும் அதிகமானோர் காணவில்லை. ஜப்பானின் சென்டாய் உட்பட பல பகுதியில் கடந்த மார்ச் மாதம் பயங்கர பூகம்பம், அதை தொடர்ந்த சுனாமி தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். இந்த தாக்குதலில் அணு உலைகள் சேதம் அடைந்து கதிர்வீச்சும் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத ஜப்பானில் கடந்த சனிக்கிழமை கடும் சூறாவளி தாக்கியது.

இதற்கு Ôடலாஸ்Õ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்கு பகுதியில் சூறாவளி மற்றும் கடும் மழை பெய்ததில் தாழ்வான பகுதியில் வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 20க்கும் அதிகமானோர் பலியாகினர். ஐம்பதுக்கும் அதிகமானோரை காணவில்லை. ஹோன்சூ, ஷிகோகு போன்ற பகுதிகளில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. இதனால் பல வீடுகள் நொறுங்கின. வகாயாமா, நரா பகுதிகளில் பலர் காணவில்லை என்று கூறப்படுகிறது. கன்சாய் பகுதியில் 30 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment