Wednesday, September 14, 2011
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளைக்கும் இலங்கைக்குப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஜெனீவா நகரில் நடைபெற்றுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர் தெரிவிக்கப்படுகிறது. இருதரப்புக்குமிடையிலான இந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமாக இடம்பெற்றது எனவும் இலங்கைப் பிரதிநிதிகள் தங்களது தரப்பில் வழங்கிய அனைத்து விளக்கங்களையும் நவநீதம் பிள்ளை அமைதியாகச் செவிமடுத்துக் கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் நவநீதம்பிள்ளை உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருடன் இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடுமையான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்தமை தெரிந்ததே. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதிநிதி தமாரா குமாரநாயகமும் இச்சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment