Wednesday, September 14, 2011
பம்பலப்பிட்டி பிரதேசத்திலுள்ள விபசார விடுதியொன்றில் இருந்து ஐந்து பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடமாடும் விபசார விடுதியாக அதனை சந்தேகநபர்கள் நடத்திச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற பெண் கைது!
பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக நாடுகடத்த முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு செல்லவிருந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தில் ஐந்து கோடி ரூபா நாணயத்தாள்கள் மதிபீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவிக்கிறார்.
கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்கள் டொலர்கள்,யோராக்கள் குவைத் தினார் ஜப்பான் யென் உள்ளி்ட்டவை அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவவந்துள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் குறித்த நாணயத்தாள்களை விமான நிலையத்திற்கு ஒப்படைக்க வேண்டிய பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்ததாக பிரதி சுங்க பணிப்பாளர் குறிப்பிடுகிறார்

No comments:
Post a Comment