Sunday, September 25, 2011இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் யுத்தக் குற்றச் செயல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சட்ட விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைபபு வழங்கும் நோக்கில் சட்டத்தரணி ஜே.டி.இசட். குணசேகர தலைமையில் உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் N;பரவையில் இலங்கை அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொது மக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் விசேட சட்டத்தரணிகள் குழு ஆராயவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
செனல்4 ஊடக ஆவணப்படம் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஏன் இத்தனை காலம் பகிரங்கப்படுத்தப்படவில்லை ? யுத்தத்தில் 40000 பேர் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரங்கள் எங்கே? போன்ற கேள்விகளை எழுப்ப உத்தேசித்துள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment