Tuesday, September 20, 2011

மனித உரிமை கண்காணிப்பகம் நம்பகத்தன்மையானதா – சவேந்திர சில்வா!

Tuesday, September 20, 2011
மனித உரிமை கண்காணிப்பகம் நம்பகதன்மையுடையதா என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிப் பிரதிநிதி சவேந்திர சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற நான்கு – ஐந்து மாதங்கள் பற்றிய விடயங்களை மட்டும் கருத்திற் கொள்வது நியாயமாக அமையுமா என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

27 ஆண்டுகளாக புலிகள் மேற்கொண்டு வந்த பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் கவனம் செலுத்தத் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இடைக்கால பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றன என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக அண்மையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனை குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் குறுகிய காலத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டு அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கிய இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவிக்க சில தரப்பினர் தயக்கம் காட்டி வருகின்றமை அதிருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினையின் சகல கோணங்களையும் யதார்த்தமாக ஆராயும் நோக்கில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதாகவும், அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் அவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை சுமத்துவதில் அர்த்தமில்லை எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

எனினும், அடெல் பாலசிங்கம், ருத்ரகுமாரன் போன்ற புலிகளின் அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

28 வருடங்களாக புலிகள் தொடர்பில் ஏன் மௌனம் காத்தீர்கள் என சவேந்திர சில்வா கேட்டாராம் திவயின கூறுகிறது

28 வருடங்களாக குண்டுகளை வெடிக்க செய்து, குழந்தைகளை கூட வாளால் வெட்டி படுகொலை செய்த விடுதலைப்புலிகள் கொடூரமான குற்றங்களை செய்த போது, நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதிவதிவிடப் பிரதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மனித உரிமை கண்காணிப்பகத்திடம் கேள்வி எழுப்பியதாக திவயின தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சவேந்திர சில்வாவின் இந்த கேள்விக்கு பதிலளிக்காது அரசசார்பற்ற நிறுவனங்களில் பிரதிநிதிகள் மௌனமாக இருந்தாகவும் திவயின கூறியுள்ளது.

சவேந்திர சில்வை சந்தித்த, மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதிகள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள சவேந்திர சில்வா, மனித உரிமை கண்காணிப்பகம் தொடர்பாக நம்பிக்கை கொள்ள முடியுமான என கேள்வி எழுப்பியதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment