Thursday, September 8, 2011

கிரேண்ட்பாஸ் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பாதாளஉலக உறுப்பினர் பலி!

Thursday, September 08, 2011
கிரேண்ட்பாஸ் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பாதாளஉலக உறுப்பினர் பலி!

கிரேண்ட்பாஸ் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் இன்று அதிகாலைபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் ஆயுதங்களை தாங்கிய மூவர் அப்பகுதிக்குள் நுழைந்தமைத் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

பாதாள உலககோஷ்டியைச் சேர்ந்தவர்கள்; பொலிஸார் மீது நடத்திய தாக்குதலுக்கு பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு சந்தேகநபர்களும் தப்பியோடியதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது ரி-56 ரக துப்பாக்கியொன்றையும் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment