Wednesday, September 7, 2011

ஜானக பெரேரா கெலை வழக்கின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Wednesday, September 07, 2011
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த தற்கொலை குண்டுத்தாக்குதலின் சந்தேகநபர்கள் இருவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தெடரபான வழக்கு விசாரணை அனுராதபுரம் மேல் நீதிமனறத்தில் இன்று நடைபெற்ற போதே சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பாக இம்முறை சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றத்தில் பிரசன்னமாயிருக்கவில்லை.

இதனையடுத்து அடுத்த வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிகளின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர பிரதிவாதிகளுக்கு அறிவித்தார்.

ஜானக பெரேரா கொலை தொடர்பில் பத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் எட்டு பேர் பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்

No comments:

Post a Comment