Saturday, September 24, 2011
திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கை இந்திய ஒன்றிணைந்த கடற்படை பயிற்சி நடவடிக்கைகள் நேற்றைய தினம் நிறைவடைந்தன.
இந்த பயிற்சி நடவடிக்கைகள் கடந்த நான்கு தினங்களாக முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது, கடற்படையின் 11 பாரிய கப்பல்களும், 15 சிறிய ரக கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
நேற்றைய இறுதி நாள் நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச கலந்து கொண்டதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த கடற்படை பயிற்சியில், இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியத்தின் ஆறு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இந்த ஒன்றிணைந்த கடற்படை பயிற்சி நடவடிக்கைகளின் பின்னர் இந்திய கடற்படையினர், மகிழ்ச்சியை வெளியிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் சிறந்த புரிந்துணர்வு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினர் வெளிநாட்டு பயிற்சிகளின் போது 90 சத வீதமான பயிற்சிகளை இந்திய கடற்படையிடமிருந்தே பெற்றுக் கொள்வதாகவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment