Saturday, September 17, 2011

பங்குச் சந்தை மோசடி - அமெரிக்காவில் இலங்கையருக்கு சிறை!

Saturday, September 17, 2011
நியுயோர்க் பங்குச் சந்தை பரிமாற்ற நடவடிக்கைகளில் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு அமெரிக்க நீதீமன்றத்தினால் 18 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையில் காணப்படும் இவ்வாறான நிலை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கிறார்.

நியுயோர்க் பங்குச் சந்தை பரிமாற்ற நடவடிக்கைகளில் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு அமெரிக்க நீதீமன்றத்தினால் 18 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த நபர் அமெரிக்க பங்குச் சந்தையில் உட்சந்தை மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சில முதலீட்டாளர்கள் இலாபமடைவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

நியூயோர்க் பங்குச் சந்தை மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்ட நடவடிக்கை தொடர்பில் அமெரிக்காவிலுள்ள பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவிக்கிறார்.

இத்தகைய நடவடிக்கையே இலங்கை பங்குச் சந்தை விடயத்திலும் பின்பற்ற வேண்டும் என்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment