Sunday, September 25, 2011எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேரலுக்குரிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதற்கான விசேட தினமாக இன்றைய தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய உள்ளூராட்சி மனறத் தேர்தல் நடைபெறவுள்ள பிரதேசங்களில் இன்று வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுவரை 95 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சி்ன் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்தார்.
வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கட்ட நாள் முதல் இன்று வரை எவ்வித தடையும் இன்றி அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பணிகள் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என்று தபால் சேவைகள் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளிலுள்ள தபால் அலுவலகங்களுக்கு மட்டுடல்லாது விநியோகப்பணிகளில் ஈடுபடும் தபால் உத்தியோகத்தர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.
எதுர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏறடபாடுகளை செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment