Sunday, September 11, 2011

அறிக்கை தொடர்பாக அனுமானிக்க முடியாது – தமரா குணநாயகம்!

Sunday, September 11, 2011
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாவதன் முன்னர், அது தொடர்பாக முன் கூட்டியே அனுமானித்து கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த தகவலை இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபையினால் அண்மையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கை நொவம்பர் மாதம் 15ம் திகதியே கையளிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக விமர்சிப்பது இலங்கை அரசாங்கத்தின் இறைமையை பாதிக்கும் செயல் எனவும் ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment