Sunday, September 11, 2011ஐக்கிய நாடுகளின் 66வது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியூயோக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அட்டவணைக்கு அமைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 65வது கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையும் அதேவேளை, 66வது பொது அமர்வு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.
பாலஸ்தீனிய பிரச்சனை தொடர்பாக இலங்கை ஆதரவு வழங்கிய அதேவேளை, அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவது விசேட அம்சமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் வாரத்தில் நியூயோக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஏசியன் ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, பன்னாட்டு ராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்திரமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பொறுப்பிற்கு கட்டாரைச் சேர்ந்த நாசீ அப்துல்அசீஸ் அல் நாசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அல் நாசர் மிக நீண்ட காலகமாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான கட்டாரின் நிரந்தரப் பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment