Thursday, September 08, 2011அண்மையில் நோர்வேயில் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்திய நபருக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
32 வயதான அன்ட்ரேஸ் பிரிங் பிவிக்கினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 76 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் ஆகிய தாக்குதல்களின் மூலம் பலரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதலை நடத்திய பிரிவிக்கிற்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விசாரணைகளின் போது குறித்த நபருக்கும் புலிகளுக்கும் இடையில் இருக்கக் கூடிய தொடர்புகள் பற்றியும் ஆராய வேண்டுமென இலங்கை இராஜதந்திர ரீதியிலான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
புலிகளின் தாக்குதல் பாணியில் பிரிவிக் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அலெக்சென்ட்ரா பெச் என்னும் நோர்வே சட்டத்தரணியின் தலைமையிலான ஆணைக்குழுவொன்று கடந்த ஜூலை மாதம் 22ம் திகதி நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக விசாரணை அறிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அந்நாட்டு பிரதமர் ஸ்டொலன்பெர்க் உத்தரவிட்டு;ள்ளார்.
விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கு ஜூலை 22 விசாரணை ஆணைக்குழு என பெயரிடப்பட்டுள்ளது.
நோர்வே வாழ் புலிகள் உறுப்பினர்களுடனோ அல்லது வேறும் நாடுகளில் வாழும் புலி உறுப்பினர்களுடனோ தொடர்பு காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா அந்நாட்டு அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment