Friday 23rd of September 2011இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை ஐநா மனித உரிமைகள் பேரவை மீளாய்வு செய்ய வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் தமக்குரிய சர்வதேச நீதிசார் கடற்பாட்டிற்கு அமைவாக உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தொடர்பில் அறிவிக்க தவறியமை குறித்து மனித உரிமைகள் பேரவை தனது கரிசனத்தினை வெளியிட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2010 ஜூலை மாதம் முதல் 2011 ஆம் ஜூன் வரையிலான காலப்பகுதியில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 69 பக்கங்கள் கொண்ட அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பிலான முறையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பான் கீ மூனின் நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்காக மனித உரிமைகள் பேரவை ஐநா செயலாளர் நாயகத்தை ஊக்குவிக்க வேண்டுமெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment