Friday, September 09, 2011மன்னர் கடற்பரப்பிற்கு அருகில் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடற்படை ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இருதரப்புக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான அதிக வர்த்தக நடவடிக்கைகள் மன்னாரை அண்மித்த கடற்பரப்பில் இடம்பெறுகின்றன.
இங்கு சட்டவிரோதமான ஆட்கடத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment