Tuesday, September 27, 2011

பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட இரண்டு இராணுவத்தினருக்கு அபராதம்!

Tuesday, September 27, 2011
பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இராணுவ உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

யுவதி ஒருவரை அநாகரீகமான முறையில் தொட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்திய இரண்டு இராணுவ உத்தியோகத்தர்களுக்கு 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு இராணுவ உத்தியோகத்தர்களும் நீதிமன்றில், பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தனர். பாதிக்கப்பட்ட யுவதியிடம் மன்னிப்பு கோர வேண்டுமென நீதவான் லங்கா ஜயரட்ன கோரியிருந்தார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி கொம்பனித் தெருவில் உள்ள கடைத்தொகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment