Tuesday, September 27, 2011

இராணுவம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க தயார் -சவேந்திரசில்வா-மைத்திரிபால சிறிசேன!

Tuesday, September 27, 2011
கடந்த முறை தேர்தலில் எதிர்கொள்ளப்பட்ட பிழைகளை திருத்திக் கொள்வதற்கு பொதுமக்கள் இந்த முறை எஞ்சிய உள்ளுராட்சி சபை தேர்தல்களை பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியும், கொழும்பில் இன்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தது.

இதில் கலந்து கொண்ட கட்சியின் பொது செயலாளர் மைத்திரிபால சிறிசேன, தமது பிரதேசத்தை அபிவிருத்தியடையச் செய்து கொள்வதற்கு கூட்டமைப்பு அரசாங்கத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதி மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ரமேஷின் பாரியாரினால், நியூயோக் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்த தகவல்கள் அண்மையில் சர்வதேச ஊடகங்கள் உட்பட பல ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இறுதி யுத்தத்தின் போது தமது கணவர் எறிகணை தாக்குதலில் பலியானதாக தெரிவித்தே அவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

எனினும், இலங்கையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக முன் வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் உரிய பதிலளிக்க தாம் தயாராக இருப்பதாக சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதன் பொருட்டு உலகின் எந்தவொரு நீதிமன்றத்திலும், தான் முன்னிலையாக தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து இன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பிலும், கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வாவிற்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டார்...

செனல் போ தொலைக்காட்சியில் காட்டப்பட்ட கொலைக்களம் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட காணொளியை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூன் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித்த கொஹொன தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஆவண காணொளியை பான் கீ மூன் இதுவரை பார்க்கவில்லை என அவரது பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.

சனல் 4 ஆவண இறுவட்டு பல மாதங்களுக்கு முன்னரே பான் கீ மூனுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment