Sunday, September 11, 2011

அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு:காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்:போராடுவது எப்படி என்று பிரபாகரன் சொல்லிக் கொடுத்துள்ளார்-(புலி)சீமான் ஆவேச பேச்சு!

சீமானுக்கு மண்டை கொஞ்சம் குழம்பி உள்ளது தயவு செய்து ஏதாவது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்த்தால் தெளிவு பிறக்கும்!!!வேலூர் சிறையில் வாடும் 3 (புலி)தம்பிகளையும் சாக விட மாட்டோம். அவர்கள் மீது தூசு கூட விழ அனுமதிக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களை தூக்கில் போட முடியாது எனது பிணத்தின் மீது நின்றுதான் 3 பேரையும் தூக்கில் போட முடியும். இவர்களை காப்பாற்றுவது எப்படி என்று எங்களுக்கு தெரியும்:தலைவர் பிரபாகரன் சொல்லிக் கொடுத்துள்ளார்.

Sunday, September 11, 2011
அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு:காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்:போராடுவது எப்படி என்று பிரபாகரன் சொல்லிக் கொடுத்துள்ளார்-(புலி)சீமான் ஆவேச பேச்சு!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதற்காக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் பொதுக் கூட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்று நாம் தமிழர் கட்சி தலைவர் புலிசீமான் பேசியதாவது:-

நமது தம்பிமார்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறை வேற்றியதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எத்தனையோ போராட்டங்களை நாம் நடத்தினாலும், சட்ட மன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம்தான் 3 பேரின் உயிரையும் காப்பாற்றியிருக்கிறது. இதற்காக நாம் நன்றி தெரிவிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டாமல் வேறு யாரை பாராட்டுவது.

3 தமிழர்களின் உயிரை பறிக்க காங்கிரசார் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர். ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினரை அதில் பங்கேற்க வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி பலியானது போல ஒரு காங்கிரசார் கூட அருகில் இல்லையே அது ஏன் என்று இந்த குடும்பத்தினர் கேட்க வேண்டும். வரலாறு தெரியாமல் காங்கிரசார் பேசுகிறார்கள் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவசரம் அவசரமாக தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் தூக்கு தண்டனை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வேலூர் சிறையில் வாடும் 3 தம்பிகளையும் சாக விட மாட்டோம். அவர்கள் மீது தூசு கூட விழ அனுமதிக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களை தூக்கில் போட முடியாது எனது பிணத்தின் மீது நின்றுதான் 3 பேரையும் தூக்கில் போட முடியும். இவர்களை காப்பாற்றுவது எப்படி என்று எங்களுக்கு தெரியும்.

போராடுவது எப்படி என்று தலைவர் பிரபாகரன் சொல்லிக் கொடுத்துள்ளார். போர்க்களத்தில் அவரை சந்தித்த போது எனது கையை பிடித்துக் கொண்டு எப்படி போராட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது எப்படி என்றே 10 புத்தகங்களை பிரபாகரன் எழுதியுள்ளார். தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த காங்கிரசுக்கு இனி தமிழ்நாட்டில் இட மில்லை 3 பேரையும் தூக்கீல் போட தூக்கு கயிறு தயாராகி விட்டது என்ற மமதையில் காங்கிரஸ் காரர்கள் இருக்கிறார்கள்.

காங்கிரசுக்கான தூக்கு கயிறு எங்களிடம் தயாராக உள்ளது. வேரோடு, வேராக மண்ணில் காங்கிரசை சாய்ப்பதே எங்கள் லட்சியம் இதனை நிச்சயம் செய்து காட்டுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை அனைத்து தொகுதிகளிலும் தமிழர்கள் தோற்கடிப்பார்கள். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இதற்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தமிழர்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள்.

இவ்வாறு சீமான் பேசினார்.

பேராசிரியர் தீரன், டைரக்டர் மணிவண்ணன், தடா சந்திரசேகர், கலைக் கோட்டுதயம், அய்யநாதன், பால் நியூடன், குமார், டைரக்டர் செல்வபாரதி, கார்வண்ணன், ஜெயசீலன், கல்யாண சுந்தரம் திலீபன், அன்பு தென்னவன், தங்க ராசு, பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், ஆவல் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டைரக்டர் மணிவண்ணன் பேசும் போது, மரணத்துக்கு பின்னர் எனது உடலில் புலிக் கொடிதான் போர்த்த வேண்டும் என்று கூறினார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம் வாங்குவதற்காக இது மாதிரி தமிழ் நாட்டில் நடிக்கிறார்கள். சட்டசபையில் யார் வேண்டுமானாலும் தீர்மானம் நிறைவேற்றலாம் இதனால் உன் மேல் நடிகை விஜயலட்சுமி போட்ட கேசை திசைமாற்ற இன்று அம்மா அம்மா என்று admk மந்திரியை விட அதிகமாக ஜால்ரா அடிக்கிறாய். எப்புடி இருந்த நீ இப்படி ஆகிவிட்டாய். உன் சுயரூபத்தை வெளியே கொண்டு வந்த நடிகை விஜயலட்சுமிக்கு நன்றி இனி நீ டம்மி பீசு தான்:ஒரு வை கோ- வையே தாங்க முடியல. இதுல இன்னொருவர்:சீமான் நாட்டுக்கு எதாவது நல்லது செய்ய பாருங்கள். அதை விட்டு விட்டு ஆட்சியை கவிழ்ப்பேன், வீட்டை உடைப்பேன்னு முட்டாள் தனமா வசனம் பேசாதீர்.

No comments:

Post a Comment