Sunday, September 11, 2011இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 35 பேரும், இவர்களின் ஏழு படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இவர்கள் அடுத்த வாரமளவில் நாடு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஒரு படகின் உரிமையாளர் இந்திய அரசின் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால் குறித்த படகு விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கிறது.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் எட்டு படகுகளில் பயணித்த 41 இலங்கை மீனவர்கள் அண்மையில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment