Friday, September 23, 2011

கேணல் ரமேஷின் மனைவி, ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல்?.

Friday 23rd of September 2011
புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான கேணல் ரமேஷின் மனைவி, ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக ஆங்கில இணையதளமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரமேஷின் மனைவி வசந்தா தேவி என்பவரே இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தனது கணவரை கொலை செய்ததாகத் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நியூயோர்க்கின் தென் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செனல்4 ஆவணப்படத்தில் தமது கணவர் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், தனது கணவரின் சடலத்தை வீடியோ காட்சிகளின் மூலம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதியே இந்த குற்றச் செயலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment