Monday, September 26, 2011

தரூஸ்மன் அறிக்கை தொடர்பாக மூனிற்கு ஞாபகப்படுத்தியுள்ள ஜனாதிபதி!

Monday, September 26, 2011
தருசுமான் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனினால் வழங்கப்பட்டுள்ள உறுதி தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவு கூர்ந்துள்ளார்.

நேற்று ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் பொது செயலாளர் பான் கீமூனை சந்தித்து பேசிய போது அவர் இந்த நினைவு கூறலை விடுத்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு மீண்டும் தலையுயர்த்த முடியாத வகையில் தமது அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று இந்த சந்திப்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வடபிராந்தியத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அவர் ஐக்கிய நாடுகள் பொதுசெயலாளருக்கு விளக்கமளித்துள்ளார்.

தருசுமான் ஆலோசனைக் குழுவானது, புலிகளை தோற்கடித்தமை தொடர்பான நடவடிக்கைகளின் இறுதி கட்டத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பேன் கீமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதன்படி, இலங்கையில் யுத்தம் தொடர்பான நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கோ, விசாரணை நடத்துவதற்கோ அந்த குழு நியமிக்கப்படவில்லை என பேன் கீமூன் உறுதியளித்திருந்தமையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

எவ்வாறாயினும். இறுதிகட்ட யுத்தம் தொடர்பில் நம்பிக்கையான அறிக்கையொன்றை எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பேன் கீமூன் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது......

தரூஸ்மன் அறிக்கை தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிற்கு மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பான் கீ மூனைச் சந்தித்தபோது இதனை ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதம் தலை தூக்குவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமது அரசாங்கம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது அங்குள்ள பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் பலர் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் நாட்டின் ஏனைய மாகாணங்களில் பாதுகாப்பு நடவடடிக்கைகளிலேயே பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் தொடர்ந்தும் அதிக முக்கியத்துவம் வழங்குவதாக ஜனாதிபதி பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யுத்த நடவடிக்கைகளின் போது இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக நம்பகத்தன்மையுடன் கூடிய தேசிய பொறுப்புடைமை நடவடிக்கையொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

மோதல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து கவனம் செலுத்தி அரசியல் தீர்வொன்றை காணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஐநா செயலாளர் நாயகம் வலியுறுத்தியதாக ஐநா செய்திச் சேவை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment