Wednesday,September 14,2011
அர்ஜென்டினா தலைநகர் பியூனோஸ் ஏர்ஸ் நகரில் இருந்து அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அதிக அளவில் ரெயில் போக்குவரத்து உள்ளது. அங்கு ரோட்டை ஓட்டிதான் தண்டவாளங்கள் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டு பியூனோஸ் ஏர்ஸ் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒரு பஸ் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது. இதைத்தொடர்ந்து அந்த பஸ் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ரெயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் தூக்கி வீசப்பட்டது. இதற்கிடையே மோதிய ரெயில் என்ஜினின் உடைந்த பாகம் பறந்து சென்று பக்கத்து தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரெயில் மீது விழுந்தது. இதனால் 2 ரெயில்களும் தடம்புரண்டு ஒன்றையொன்று மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட ரெயில்களில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். 212 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர்கள் மூலம் அப்பகுதியில் உள்ள 7 ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 20 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பியூனஸ் ஏர்ஸ் நகரில் கடந்த ஆண்டில் மட்டும் 165 வாகனங்கள் மீது ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 295 பேர் பலியாகி உள்ளனர்.

No comments:
Post a Comment