Wednesday, September 14, 2011

அரக்கோணம் ரெயில் விபத்து: 11 ரெயில்கள் ரத்து; 9 ரெயில்கள் நேரம் மாற்றம்!

Wednesday,September 14,2011
அரக்கோணம் ரெயில் விபத்து காரணமாக சென்னையின் 2 மார்க்கத்திலும் 11 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. ரெயில் விபத்து நடந்த அரக்கோணம் ரெயில் பாதையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் ரெயில்களும், அந்த மார்க்கமாக வரும் சென்னை ரெயில்களின் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேற்று இரவு இந்த மார்க்கத்தில் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரல்-பெங்களூர் மெயில் (நம்பர் 12657), சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (நம்பர் 16669) ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இன்று 2-வது நாளாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் விவரம் வருமாறு:-

1. சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் (12675)

2. கோயம்புத்தூர்- சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் (12676)

3. சென்ட்ரல்-பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (12639)

4. பெங்களூர்-சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (12640)

5. சென்ட்ரல்-கோயம் புத்தூர் துரந்தோ எக்ஸ்பிரஸ் (12243)

6. கோயம்புத்தூர்-சென்ட்ரல் துரந்தோ எக்ஸ்பிரஸ் (12244)

7. ஈரோடு-சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (16670)

8. திருப்பத்தூர்-சென்ட்ரல் (16090)

9. சென்ட்ரல்-திருப்பத்தூர் (16089)

10. ஜோலார் பேட்டை- அரக்கோணம் (16086)

11. அரக்கோணம்- ஜோலார்பேட்டை (16087) இதுதவிர 9 ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மங்களூர் - வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (16627) மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து அமதாபாத்துக்கு காலை 9.35 மணிக்கு புறப்படும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் (12656) மாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது.

சென்ட்ரலில் இருந்து பகல் 3.25 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12695) இரவு 8 மணிக்கு புறப்படும் செல்லும். பெங்களூரில் இருந்து காலை 6 மணிக்கு சென்னை புறப்படும் சதாப்தி எக்ஸ் பிரஸ் (12028) தாமதமாக 9 மணிக்கு புறப்பட்டது.

பெங்களூரில் இருந்து காலை 6.30 மணிக்கு சென்னை புறப்படும் லால் பார்க் எக்ஸ்பிரஸ் (12608) 9.30 மணிக்கு புறப்பட்டது. சென்ட்ரலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் பெங்களூர் எக்ஸ் பிரஸ் (12609) மாலை 5 மணிக்கு புறப்படுகிறது.

சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ் (12685) இரவு 11 மணிக்கு புறப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12623) இரவு 10.30 மணிக்கு புறப்படுகிறது.

சென்ட்ரலில் இருந்து பகல் 2.30 மணிக்கு புறப்படும் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12679) மாலை 5.20 மணிக்கு புறப்படுகிறது. மாற்றுப்பாதையில் செல்லும் ரெயில்கள் மேலும் 5 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06053) விழுப்புரம்-திருச்சி வழியாக மாற்றி விடப்பட் டுள்ளது. திருவனந்தபுரம்- கோரக் பூர் எக்ஸ்பிரஸ் (12512) எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ் (16309), கவுகாத்தி-பெங்களூர் எக்ஸ்பிரஸ் (12510) ஆகியவை காட்பாடி, பகலா, ரேணு குண்டா வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்- சென்ட்ரல் (12672) பெங் களூர்-சென்னை சென்ட்ரல் (12658), சென்ட்ரல்- மங்களூர், மங்களூர்- சென்ட்ரல் (12601, 12602), சென்ட்ரல்- ஆலப்புழா (16041), சென்ட்ரல்-கோவை (12673), சென்ட்ரல்-மைசூர் (16222) ஆகிய ரெயில்கள் காட்பாடி, ரேணிகுண்டா, அரக்கோணம் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன.

எர்ணாகுளம்-கவுகாத்தி (12507), திருவனந்தபுரம்- சென்ட்ரல் (12696), இந்தூர்-திருவனந்தபுரம் (16325), தன்பாத்-ஆலப்புழா (13351), கோயம்புத்தூர்-சென்ட்ரல் இண்டர்சிட்டி (12680), மங்களூர்-சென்ட்ரல் (16628) ஆகிய ரெயில்கள் சேலம், விருத்தாசலம், விழுப்புரம், எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

ஆலப்புழா-சென்ட்ரல், கோவை-சென்ட்ரல் (சேரன் எக்ஸ்பிரஸ்), மைசூர்- சென்னை (காவேரி எக்ஸ்பிரஸ்), திருவனந்தபுரம்- சென்ட்ரல் மெயில், மங்களூர்-சென்ட்ரல் ரெயில் காட்பாடியுடன் நிறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment