Thursday,September, 29, 2011கொழும்பு:50 இலங்கையர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாளைய தினம் நாடு திரும்புவார்கள் என பிரித்தானியாவிற்கான இலங்கை கன்சோல் அதிகாரி சமிந்த குலரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இதில் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் சுமூக நிலைமை ஏற்பட்டுள்ளதனால் தஞ்சம் வழங்கும் நடவடிக்கைகளை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக குறி;த்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment