Friday, September 9, 2011

அமெரிக்காவுக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவல்: நியூயார்க்கில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Friday, September 09, 2011
அமெரிக்காவுக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நியூ யார்க்கில் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி அமெரிக்காவில் அல்- கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அந்த தாக்குதல் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 10-வது ஆண்டு நிறைவு நாளில் அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவியது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த 3 தீவிரவாதிகள் கடந்த ஆகஸ்டு மாதம் விமானம் மூலம் அமெரிக்காவுக்குள் ஊடுருவியதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் வெடிகுண்டு நிரப்பிய வாகனங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. அதற்கு ஏற்றார் போல் மிஸ்சோரி மாகாணத்தில் உள்ள கன்சால் நகரில் 2 வாடகை லாரிகள் திடீரென மாயமானது. எனவே அவற்றில் வெடி குண்டுகளை நிரப்பி தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. எனவே, அந்த வாகனங்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கை குறி வைத்து தீவிரவாதிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். எனவே, மீண்டும் நியூயார்க்கில் தாக்குதல் நடத்தக்கூடும் என கருதி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் போலீசாரும், உளவுத்துறையினரும் மிகவும் தயாரான நிலையில் உள்ளனர். கூடுதலான போலீசார் குவிக்கப்பட்டு நகரம் முழுவதும் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்த தகவலை நியூயார்க் நகர மேயர் மைக்கேல் புளும்பர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, தீவிரவாதிகள் ஊடுருவியதாக கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. இருந்தாலும் மிரட்டல் விடுக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே, நமக்கு பாதுகாப்பு அவசியம். ஆகவே சந்தேக நபர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் அச்சமின்றி வாழலாம். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை பாது காப்பு மந்திரி ஜேனெட் நபோலிடானேவுடன் பேசி இருக்கிறேன் என்றும் கூறினார்.

இதற்கிடையே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிபர் ஒபாமா தீவிரவாத தடுப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தீவிரவாதிகள் ஊடுருவிய தாக வெளியான தகவலை தொடர்ந்து பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment