Tuesday, September 13, 2011

2-ம் இணைப்பு:-புலிகளால் தொடர்ந்தும் தொந்தரவு: புலம்பெயர் (புலிசார்பு) தமிழர்கள் அதற்கு ஆதரவு-மஹிந்த சமரசிங்க!

Tuesday, September 13, 2011
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை தொடர்பாக இன்று பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் மனித உரிமைகளை நிலைநிறுத்த தவறிய நாடுகளில் இலங்கையும் ஓர் உதாரணம் என நவநீதம் பிள்ளை கூறிய நிலையில் இரு தரப்பிற்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் செயற்பாடுகளை இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடுமையாக விமர்சித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க,

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியனவற்றை தோற்கடித்தமை தொடர்பான அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.புலிகள் சர்வதேச ரீதியாக செயல்பட்டு தொடர்ந்தும் இலங்கைக்கு இன்னல்களை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு (புலிசார்பு)புலம்பெயர்ந்த தமிழர்கள்,உறுதுணையாக உள்ளனர்.அவ்வாறானவர்கள் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய நிலைப்பாட்டை மறந்து செயல்படுவகின்றனர்.

புதிய நாடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளமை குறித்து அவர்களுக்கு தாம் நினைவு படுத்துவதாக தெரிவித்த அவர், இதேவேளை, யுத்தத்தினால் பாதிப்பிற்கு உள்ளான கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மீண்டும் கட்டி எழுப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே இடம்பெயர்ந்த மக்களில் 7 ஆயிரம் பேர் மட்டுமே மீள் குடியேற்றபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை,புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பலர் வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்தும் 2 ஆயிரத்து 700 பேர் புனர்வாழ்வு அளிக்கப்படு வருகிறது.

தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு என்;பன தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின், யோசனைக்கு அமைய அவதானம் செலுத்தப்படும்.இந்த சகல நடவடிக்கைகளும், எதிர்பார்ப்புகளும், இலங்கையை சர்வதேச ரீதியாக அடையாப்படுத்தும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே, தேசிய பிரச்சனைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை ஸ்தாபித்துள்ளதாக தமது உரையில் நினைவு கூர்ந்தார்.

உறுதியளித்தது போல மனித உரிமை நடவடிக்கைகள் தொடர்பான திட்டம் ஒன்றை முன்வைக்க தங்களால் முடிந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, அவசர கால சட்டம் நீக்கப்படுவதாக இதற்கு முன்னர் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டதாகவும், எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணியாது அவசர காலம் விலக்கிக் கொள்ளப்பட்டமை மக்களுக்கு கிடைத்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்சமயம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டது தொடர்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தமது உரையில் நினைவு கூர்ந்தார்.

அந்த ஆணைக் குழுவின் பிரதானி நவநீதன்பிள்ளையின் செயல்பாடுகள் மாறுபட்டவிதத்தில் காணப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் ஆலோசனை அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்காது, ஏனைய நாடுகளுக்கு அனுப்பப்பட்டமை இதற்கு ஒரு உதாரணம் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் இல்லாத ஐ.நா., அறிக்கை : இலங்கை சாடல்!

கொழும்பு: "அரசியல் காரணங்கள் எதுவுமே இல்லாத போது, சர்வதேச சமூகம், இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றங்கள் சுமத்த முடியாது' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று முதல் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 18 வது கூட்டம் துவங்கியுள்ளது. 30ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆலோசனையும் இடம் பெற உள்ளது.

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட "கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் மறுவாழ்வு' கமிஷனின் (எல்.எல்.ஆர்.சி.,) அறிக்கை நவம்பர் 15ம் தேதி இலங்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துணைச் செயலர் ராபர்ட் பிளேக் நேற்று இலங்கை வந்தார். இலங்கை அதிபர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து, மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்க உள்ளார். இதற்கிடையில், இலங்கை எம்.பி.,யும் அரசின் சர்வதேச செய்தித் தொடர்பாளருமான ராஜிவ் வி.ஜே.சின்ஹா நேற்று அளித்த பேட்டியில்,"ஐ.நா., அளித்த போர்க் குற்ற அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என, ஏற்கனவே நிரூபித்துள்ளோம். அதனால் அரசியல் காரணங்கள் இல்லாத போது, சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது' எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment