Tuesday, September 13, 2011இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரின் கூட்டு இராணுவ பயிற்சிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் நடத்தப்பட உள்ளதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை- இந்திய கடற்படையினருக்கு இடையில் காணப்படும் நட்புறவுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த பயிற்சிகளை நடத்தப்பட உள்ளன. இந்தியாவின் போர் கப்பல்கள், தாக்குதல் படகுகள் இந்த பயிற்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளன.
அதேவேளை இரண்டு நாடுகளின் கடற்படையினரின் பயிற்சிகள், பரரமரிப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் சோமதிலக்க திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment