Sunday, September 11, 2011

கடற்படைக்கு ஸி 2,170 கோடியில் 8 அதிநவீன கப்பல் : மத்திய அரசு ஒப்புதல்!

Sunday, September 11, 2011
புதுடெல்லி: கடற்படைக்காக ஸி2,170 கோடி மதிப்பில் 8 சிறிய கப்பல்கள் தயாரிக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கடற்படையில் தற்போது தரையில் இருந்து கப்பலுக்கு ராணுவ வாகனங்கள், தளவாடங்கள், வீரர்களை ஏற்றிச் செல்லவும், அதேபோல் கப்பலில் இருந்து இவற்றை தரைக்கு கொண்டு வந்த இறக்கவும் எல்.சி.யு. எனப்படும் 6 சிறிய ரக கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் 35 வீரர்கள் பயணம் செய்ய முடியும். இந்த கப்பல்கள் கடற்கரையின் தரைப் பகுதி வரை வந்து செல்லும் திறன் படைத்தவை. இப்போதுள்ள இந்த கப்பல்களுக்கு மாற்றாக 8 அதிநவீன புதிய கப்பல்களை ஸி2,170 கோடி மதிப்பில் தயாரிக்க மத்திய அமைச்சரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இந்த கப்பல்கள் கொல்கத்தாவில் உள்ள ‘கார்டன் ரீச்‘ என்ற கப்பல் கட்டும் நிறுவனம் தயாரித்து 4 ஆண்டுகளுக்குள் கடற்படைக்கு டெலிவரி செய்யும். இந்த கப்பல் ஒவ்வொன்றும் 500 டன் எடை கொண்டது.

No comments:

Post a Comment