Tuesday, September 13, 2011
வவுனியா பூந்ட்டம் முகாமில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தினால் 20 குடும்பங்கள் அநாதரவான நிலைமைக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்து இடம்பெற்று இரண்டு தினங்கள் கழிந்த போதும் உரிய கிராமஅலுவலர் உட்பட ஏனைய அரசஅலுவலர்கள் எவரும் இந்த மக்களுடைய அவல நிலைமை சம்பந்தமாக நடவடிக்கையெடுக்கவில்லையென அந்தப் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் திடீரென முகாமில் தீ ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தீ மேலும் பரவாத வண்ணம் முகாமில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து தீயை அணைத்துள்ளார்கள்.
இந்த முகாமில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வன்னி உட்பட பல பகுதிகளில் இருந்தும் இடம்பெயர்ந்த 168 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்கியுள்ளனர்.
இவர்களை முகாமில் இருந்தும் வெளியேற வேண்டும் என பிரதேசசெயலாளர் உட்பட அனைவரும் கூறி வருவதுடன் இவர்களை ஒரு முகாமாக கணக்கெடுப்பதில்லையெனவும் இதனால் தாம் மீள்குடியேற்றம் என்ற விடயத்தில் தமக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment