Friday, September 02, 2011
புதுடெல்லி:மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி னார்கள். அப்போது பிடிபட்ட தீவிரவாதி மற்றும் தாக்குதல் சதியில் ஈடுபட்ட பாகீம்அன்சாரி, சபாவுதீன் ஆகியோர் மீது மும்பை தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மும்பை ஐகோர்ட்டு இந்த தீர்ப்பை உறுதி செய்தது. 2 பேர் விடுதலையை எதிர்த்து மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. பகீம் அன்சாரி, சபாவுதீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது.
இதே போல் தூக்கு தண்டனையை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் கசாப் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.
No comments:
Post a Comment