Sunday, August 28, 2011

ஐரோப்பியாவில் இயங்கும் புலிகளின் முன்னணி அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை பதில் வழங்கவில்லை-ரவீந்திர ஆரியசிங்க!

Sunday, August 28, 2011
ஐரோப்பியாவில் இயங்கும் புலிகளின் முன்னணி அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை பதில் வழங்கவில்லைஇதனை இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பு இன்னமும் வெளிநாடுகளில் முன்னணி அமைப்பாக செயற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமது கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் பதிலளிக்கும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பு தடை செய்யப்படும் அதேநேரம் அதன் கிளை அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும் என்பதே இலங்கையின் கோரிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.

புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர். எனினும் முன்னணி அமைப்புகளாக அவை, வெளிநாடுகளில் செயற்பட்டு வருகின்றன.

தமிழர் புனர்வாழ்வு கழகம், தமிழ் இணைப்புக்குழு மற்றும் தமிழ் இளைஞர் குழு போன்றவற்றையே தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment