இலங்கையில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் தடைச் சட்ட நீக்கத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான விக்ரோறியா நுலாண்ட்!
Friday, August 26, 2011
இலங்கைத் தீவில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் தடைச் சட்ட நீக்கத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா இந் நடவடிக்கை ஒரு சாதக மனப்பாண்மையை வளர்க்கும் செயலென பாராட்டியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான விக்ரோறியா நுலாண்ட் “நாங்கள் ராஜபக்ச பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிந்துரைத்ததை வரவேற்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. எங்களின் தென்னாசியாவிற்கான இராஜதந்திரச் செயலரான றொபேட் ஈ. பிளேக் அவர்களை ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை இலங்கை செல்லவும் வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் அவர் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்பாகக் பேசுவதற்கு தமிழ்க் கட்சிகளுடன் சந்திப்பை மேற்கொள்வார் என்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்றும் தெரிவித்தார்.
அரச சார்பற்ற மற்றும் கட்சிகளுடன் விரிவான பேச்சுக்களில் ஈடுபடுவார் என்றும் நாங்கள் இலங்கை அரசை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மதிப்பது தொடர்பாகவும் கடந்த காலத்தில் அது தொடர்பாக நடைபெற்றவை தொடர்பாகவும் தேசிய ரீதியாக விசாரிக்கச் சொல்வோம் எனவும் தெரிவித்தார்.
அவர்கள் அவ்வாறு தங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால் இந்த விவகாரத்தில் சர்வதேசம் தலையிடும் என்பதை றொபேட் பிளேக் அவர்கள் ராஜபக்சவின் ஆட்சிக்குத் தெரிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment