Friday, August 26, 2011
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை வாழ் தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிக்கா புட்டினாஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
15-01-2010ம் திகதியில் அமெரிக்கத் தூதரகத்திற்கும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கும் இடையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றத்தின் போது இந்தத் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
யுத்தக் குற்றச் செயல் தொடர்பான விசாரணைகள் யதார்த்தமற்றவை எனவும், அவை பாதகமான விளைவினை ஏற்படுத்தக் கூடும் எனவும் இலங்கை வாழ் தமிழர்கள் கருதுவதாக புட்டினாஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை வலியுறுத்துவதன் மூலம் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடலாம் என இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை புலம்பெயர் தமிழர்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment