Tuesday, August 23, 2011

புலிகளின் அரசியல் கட்சியை ரத்து செய்யத் தீர்மானம் - ENDLF கட்சிக்கும் தடை?.

Tuesday, August 23, 2011
புலிகளினால் நிறுவப்பட்ட அரசியல் கட்சியை ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில் 1989ம் ஆண்டு புலிகளினால் புதிய அரசியல் கட்சியென்று பதிவு செய்யப்பட்டது.

புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரில் இந்த கட்சி நிறுவப்பட்டது.

அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் மற்றும் அங்கீகரித்தல் தொடர்பான பதிய சட்ட விதிகளுக்கு அமைவாக புலிகளின் அரசியல் கட்சி தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக யோகரட்னம் யோகியும், கட்சியின் தலைவராக மாத்தையாவும் பெயரிடப்பட்டிருந்தனர்.

புலிகள் மக்கள் முன்னணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு வந்த போதிலும், மிக நீண்ட காலமாக அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் குறித்த கட்சியின் கீழ் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்குச் சீட்டுக்களில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட போது எவரும் இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

புதிய சட்டத்தின் பிரகாரம் அரசியல் கட்சிகள் ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் வருடாந்த கணக்கறிக்கை ஆகியவற்றை தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

புலிகள் மக்கள் முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் நீண்ட காலமாக இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவிலிருந்து இயங்கி வரும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்ற கட்சியையும் தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment