Tuesday, August 23, 2011
இலங்கையின் பல பாகங்களிலும் கலக்கிக்கொண்டிருக்கும் கிறீஸ் பூதஙகள் நேற்று யாழ்ப்பாணத்தையும் சென்றடைந்துவிட்டன. யாழ் மாநகரின் புறநகர் பகுதியான நாவாந்துறை மற்றும் வடமராட்சியின் வதிரி ஆலடி பகுதிகளில் நேற்றிரவு பொதுமக்களுக்கும் படையினருக்குமிடையே மோதல்கள் இடம்பெற்றதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
படையினர் பொதுமக்களை நோக்கியும் ஆகாயத்தை நோக்கியும் வேட்டுக்களை தீர்த்ததாகவும், நேற்றிரவுவரை இரண்டிற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் பதற்றமான சூழல் காணப்பட்டதாகவும், நாவாந்துறையில் படை முகாமினை சுற்றிவழைத்து மக்கள் நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனால் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டனர். வதிரியில் பொதுமக்கள் ஒன்று திரள்வதை தடுக்க படையினர் தொடர்ச்சியாக வேட்டுக்களை தீர்த்தவண்ணமிருந்தனர்.
நாவாந்துறையினுள் வீடொன்றினுள் சந்தேகிக்கப்படுபவர்கள் உள் நுழைந்துள்ளனர். இதையடுத்து மக்கள் ஒன்று திரளவே அவர்கள் அருகிலுள்ள படை முகாமினுள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை வெளிப்படுத்தக் கோரி மக்கள் படைமுகாமை சுற்றி வளைத்தனர். படை முகாமினுள் இருந்து படையினர் வேட்டுக்களை தீர்த்தனர்.
வடமராட்சியின் வதிரி ஆலங்கட்டை மயானத்தையண்டிய பகுதியில் நபரொருவர் இரவு வேளை வீடொன்றினுள் உள் நுழைந்துள்ளார். பொதுமக்களிடம் அகப்பட்டுக்கொண்ட அவரை வெள்ளை வானில சென்ற மீட்டெடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment