Sunday, August 28, 2011

விசாகப்பட்டினத்திற்கு இலங்கை ராணுவ வீரர்கள் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு: சென்னையில் அவசரமாக தரை இறங்கியது!

Sunday, August 28, 2011
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து அங்குள்ள விமானப்படை விமானம் ஒன்று விசாகப் பட்டினத்திற்கு புறப்பட்டுச் சென்றது.அதில் 7 ராணுவ வீரர்கள் இருந்தனர். அந்த விமானம் சென்னை அருகே நடுவானில் சென்றபோது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானம் சென்னையில் தரை இறங்க அனுமதித்தனர். இதையடுத்து அந்த விமானம் அவசரமாக காலை 8.15 மணிக்கு தரை இறங்கியது.

பின்னர் அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். கோளாறை சரி செய்த பிறகு இலங்கை விமானப்படை வீரர்கள் விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு செல்வார்கள்.

No comments:

Post a Comment