இவனைப் போல ஆட்களின் செய்திகளை வெளியிடுவது தேவையற்றது. என்ன செய்வது??
Thursday, August 25, 2011
இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நீடிக்கிறது:(புலிகளின்) நாம் தமிழர் கட்சி தலைவர் (புலி)சீமான் குற்றச்சாட்டு!
(புலிகளின்)நாம் தமிழர் கட்சி தலைவர் (புலி)சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்கிளப்பில் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு தமிழ்ப் பெண்களின் மார்பகங்களை அறுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களின் நடமாட்டம் இப்போது தொடர்ந்து தமிழர் வாழும் பகுதிகளில் பரவி வருகிறது.
வடக்கு மாவட்டமான யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை காணப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள நாவாந்துறை எனும் மீனவ கிராமத்தில் திங்கட்கிழமை இரவு இப்படிப்பட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் நுழைந்துள்ளனர்.
அவர்களை கண்ட அங்கிருந்த மக்கள் துரத்திப்பிடிக்க முயன்றுள்ளனர். அந்த மூன்று பேரும் அங்கிருந்த ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து தப்பித்துள்ளனர். இதைக்கண்ட மக்கள் ராணுவ முகாமை முற்றுகையிட்டுள்ளனர். மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அதற்கு சிங்கள ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் கோபமுற்ற மக்கள் அங்கிருந்த ராணுவ வாகனங்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். மக்களை கலைக்க ராணுவமும், காவல் துறையினரும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னர், நள்ளிரவில் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் நிலையங்களுக்கு இழுத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.
இந்த விவரங்கள் அனைத்தும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எமக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாகும். இதனை சில இலங்கை ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மார்பகங்கள் அறுக்கப்படுவது, பெண்களின் ரத்தத்தை எடுத்து சென்று யாகக் குண்டத்தில் ஊற்றுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முடிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு ராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்சே மிரட்டியுள்ளார்.
ஆனால், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இப்படி கிரீஸை தடவிக் கொண்டு, தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை செய்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இதிலிருந்து இந்த குற்றப் பின்னணியில் சிங்கள ராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பது தெரிகிறது. இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுவதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், அங்கு தமிழ் பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது. இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்திய மத்திய அரசு இதையெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடருமானால், இங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்படும். ஒவ்வொரு நாளும் ஈழத்தில் தமிழினம் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட கொடூரமான வன்முறைகளை ஐ.நா.அவையின் பார்வைக்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடமும் தமிழக முதல்வர் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து இன்று நடைபெற உள்ள விவாதத்தில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு உறுப்பினர்கள், தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எடுத்து கூறிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்து
Read Comments
Thursday, August 25,2011 03:28 PM, கவின் said:
இவனைப் போல ஆட்களின் செய்திகளை வெளியிடுவது தேவையற்றது. என்ன செய்வது உன் சாதிகாரனாச்சே...உம் நடத்துங்க....
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Thursday, August 25,2011 03:27 PM, சுண்டெலி said:
இறுதிகட்ட போரில் ராணுவத்திடம் இருந்து தப்பிய சில விடுதலைபுலிகளின் வேலைதான் இது... ஈழம் என்னும் பெயரை சொல்லி சொல்லியே அங்கு வாழ்ந்த மக்களை அழித்தார்கள் தற்போது எஞ்சியுள்ள விடுதலைபுலிகள் மக்களோடு மக்களாக ஊடுருவி இவ்வாறு எஞ்சியுள்ள தமிழ் மக்களை தமிழ் பெண்களை கற்பழித்து மார்பகங்களை அறுக்கிறார்கள் அவர்கள் வசம் ஆயுதம் இல்லாத காரணத்தால் வாகனங்களில் இருக்கும் கிரீஸை பூசிக்கொண்டு யாரும் தங்களை பிடித்தால் பிடி வழுக்கி தப்பித்துவிடலாம் இது தான் இந்த தறுதலை புலிகளின் தற்போதைய ஆயுதம்...
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Thursday, August 25,2011 03:26 PM, paathikkappattavar said:
தமிழ் நாட்டிலேயே வாழ்ந்துகொண்டு அகதி மாதிரி இருக்கிறோம். மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் எங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. எங்களுடைய ஜாதியில் படித்தவர்கள் மிக மிக குறைவு. யாரோ ஓரிருவர் பணக்காரர் என்பதற்காக எங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என அரசாங்கம் கூறுகிறது. எங்களுக்குகாக போராட முன் வருவீர்களா. நாங்கள் தமிழ் நாட்டில் அனாதையாக இருக்கிறோம். நாங்கள் அப்படியிருந்தால் கல்வியிலாவது போட்டி போட முடியும்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
புலிகளின் தமிழீழ குழு முக்கியஸ்தர்கள் புலிகளின் அலுவலக செயற்பாட்டாளர்கள் என நன்கு வெள்ளை சேட்டும் கறுப்பு காட்சட்டையும் சீருடையாக போட்டு மாற்றான் குடும்ப பெண்களுக்கு கண் அடிச்ச புலி புடலங்காய்கள்!!!
Thursday, August 25,2011 03:11 PM, முரளி said:
இவரு இன்னும் அண்ணா ஹசாரே விருப்பம் சொல்லா . இலங்கை விட்டு இந்தியாவிற்கு வா, இங்கு நாடாகும் நியூஸ் பாரு
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Thursday, August 25,2011 02:47 PM, ஐயோ ஐயோ said:
இந்த செய்தி இந்த ஆளுக்கு ஏதோ தனியாக வந்தது மாதிரி பீலா விடறதை பாரு. நிறுத்து. இந்த செய்தி பல்வேறு இலங்கை செய்தி இணைய தளங்களில் வந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் காவல் துறையினர் மக்கள் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு துறையினர் இந்த வதந்திகள் புலிகளின் எச்சமிச்ச அல்பங்களின் வேலை என்று கூறிகின்றனர். மக்கள் பாதுகாப்பு துறையினரின் உதவியோடு துட்டகைமுனுவின் வாளை தேடி எடுக்க அரசு முயல்கிறது'
On Thursday, August 25,2011 03:04 PM, குயவன் said :
ஒ சீமானே இப்பத்தான் உனக்கு தெரியுதா, இது ரண்டு வார பழைய செய்தி. எங்காவது தூங்கிப்புட்டு இப்ப வந்து எதோ புதுமையா சொல்றமாதிரி ஏமாத்துரையே, நீ உருப்படுவியா? நான்சென்ஸ்.
thanks-mm.
ஒ சீமானே இப்பத்தான் உனக்கு தெரியுதா, இது ரண்டு வார பழைய செய்தி. எங்காவது தூங்கிப்புட்டு இப்ப வந்து எதோ புதுமையா சொல்றமாதிரி ஏமாத்துரையே, நீ உருப்படுவியா? நான்சென்ஸ்.
thanks-mm.
No comments:
Post a Comment