Sunday, August 28, 2011

தேர்தல் தொடர்பில் விசேட சந்திப்பு!

Sunday, August 28, 2011
இடம்பெறவுள்ள எஞ்சியுள்ள 23 உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சியின் பொது செயலாளர்களுக்கும் இடையேயான சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த தகவலை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ. சுமணசிரி எமது செய்திப்பிரிவிற்குத் தெரிவித்தார்.

ஒக்டோபர் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான முதலாவது சந்திப்பு இதுவெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முறை இடம்பெறும் தேர்தலில் 25 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் இடையே 23 உள்ளுராட்சி சபைகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த முறை ஆறாயிரத்து 488 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தின் ஆறு சபைகளுக்காகவே அதிக அளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தமாக 2 ஆயிரத்து 520 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாளை காலை 7 மணி முதல் வேட்பாளர்கள் தமது விருப்பு இலக்கங்களை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என கொழும்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த மாதம் 30ஆம் திகதி வேட்பாளருடைய பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ. சுமணசிரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிறிதொரு சந்திப்பொன்று எதிர்வரும் முதலாம் திகதி காவல்துறைமா அதிபருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment