Sunday, August 21, 2011

தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்!

Sunday, August 21, 2011
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாதவர்கள் கிராம உத்தியோகத்தரை அணுகி அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென குறிப்பிடப்படுகிறது.

கடந்த பொது தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தலின் பின்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை இந்த முறை தேர்தலில் பயன்படுத்த முடியாதென மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பீ.சுமனசிறி தெரிவிக்கிறார்.

எவ்வாறாயினும் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை இம்முறை பயன்படுத்த முடியுமெனவும் தேர்தல் செயலகம் குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment