Saturday, August 27, 2011
சென்னை: தமிழர்கள் அழுக்கானவர்கள், அசுத்தமானவர்கள் என்ற ரீதியில் பேசி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க துணைத் தூதர் மெளரீன் சாவ் சென்னையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளார்.
வெகுவிரைவில் சென்னையில் தனது பதவியில் இருந்து வெளியேற அவர் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க தூதரக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி பேசிய மெளரீன் சாவ், 20 ஆண்டுகளுக்கு தாம் இந்தியாவில் தில்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் பயணம் செய்தேன். 72 மணி நேரங்களுக்குப் பிறகும் ரயில் குறிப்பிட்ட இடத்தை அடையவில்லை. அப்போது எனது தோல் தமிழர்களைப் போல் அசுத்தமாகவும்,கறுப்பாகவும் மாறிவிட்டது எனத் தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமெரிக்க தூதரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் தனது கருத்துக்காக மெளரீன் சாவ் மன்னிப்பு கேட்டிருந்தார்,
இந்த நிலையில் சென்னையில் இருந்து அவர் வெளியேற முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment