Monday, August 22, 2011
புத்தளம் மணல்குண்டு பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை குறித்து ஆராயும் பொருட்டு தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது குறித்து ஆராய இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நேற்றைய சம்பவத்தில் 5 பேர் வரை காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, சம்பவத்தை அறிந்து புத்தளம் நகருக்கு வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரையும் நேற்றிரவு சிலர் தாக்கிய நிலையில், பலத்த காயமடைந்த அவர் பின்னர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் புத்தளம் காவல்நிலையத்தில் பணியாற்றியவர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறி;ப்பிட்டார்.
கிறீஸ் பூதங்களின் வருகை தொடர்பாக வெளியான செய்திகள் காரணமாக அண்மைக்காலமாக நாட்டின் பல இடங்களில் அமைதியற்ற சூழ்நிலைகள் ஏற்பட்டன.
காவல்நிலையங்கள், மற்றும் சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்துவதே அவ்வாறான செய்திகளை பரப்புபவர்களின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment