Monday, August 22, 2011

உலக அளவில் 125 முறை கோர்ட்டில் வாய்தா வாங்கிய புகழ் ஜெயலலிதாவை தான் சேரும்: மு.க.ஸ்டாலின்!

Monday, August 22, 2011
தமிழக முன்னாள் துணை முதல் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் 21.08.2011 அன்று தஞ்சை வந்தார். பின்னர் தஞ்சையை அடுத்த சானூரப்பட்டியில் தஞ்சை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மறைந்த பொன்.கலியமூர்த்தியின் மகன் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசினர்.

பின்னர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்ற போது அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கு விலக்கு கேட்டு அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், உலக அளவில் ஏறக்குறைய 125 முறை கோர்ட்டில் வாய்தா வாங்கிய புகழ் ஜெயலலிதாவை தான் சேரும் என்றார்.

No comments:

Post a Comment