Monday, August 22, 2011
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய அரசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கையின் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்ததை நடத்தியதன் பின்னர் இந்த தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என்பது தொடர்பான யோசனைத் திட்டமாக இந்த தீர்வுத் திட்ட பரிந்துரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஓர் கட்டமாக தமிழ் அரசியல் கட்சிகளுடன் இந்திய அரசியல் தலைவர்கள் இந்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்படும் பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் உத்தேச தீர்வுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு கிழக்கிற்கான தீர்வுத் திட்டம் காலத்திற்கு காலம் ஒத்தி வைக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் இந்த உத்தேச தீர்வுத் திட்ட பரிந்துரையை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது.

No comments:
Post a Comment