Thursday, August 25, 2011

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு எந்த நாட்டின் அழுத்தமும் காரணமல்ல-அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா!

Thursday, August 25, 2011
இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு எந்த நாட்டின் அழுத்தமும் காரணமல்ல. இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்றவகையில் அதன் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்த முடிவை எடுத்து இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார் என அமைச்சரவை பதில் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்த அவசரகாலச் சட்டம் நீக்கம் நாட்டில் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment