Monday, August 22, 2011
நாகர்கோவில்: இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக பா.ஜ. சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகர பா.ஜ. சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. பா.ஜ. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர், பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் தமிழ் சமுதாயத்தை கருவறுக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு போர் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டது. தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.தமிழர்களின் வீடுகள், வழிபாட்டு தலங்களை நாசமாக்கினர்.
போருக்கு பிறகும்கூட தமிழர்கள் அகதிகள் முகாமில் திறந்த வெளியில் அவதிப்பட்டு வருகிறார்கள். வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து, சொந்தங்களை இழந்து தவிக்கக்கூடிய இலங்கை தமிழர்களுடைய மறுவாழ்வுக்காக பா.ஜ. நிதி திரட்டி வருகிறது.
இந்த நிதி நேரடியாக இலங்கை அரசிடம் வழங்கப்படாது. பாரத சேவா அமைப்பு மூலம் இலங்கை தமிழர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இலங்கை தமிழர்கள் பகுதியில் சீரமைப்பு பணிகள் மற்றும் இலங்கை தமிழர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் அரசு தமிழர்களை கொன்று குவித்த அரசாகும். இலங்கை அரசின் போர் நடவடிக்கைக்கு மத்திய அரசு உதவி செய்திருக்கிறது. இலங்கையில் இந்த நிலைக்கு காங்கிரஸ் அரசும் ஒரு காரணம். எனவே, இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக மத்திய அரசின் நிலையில் மாற்றம் வரும் என இனி எதிர்பார்க்க முடியாது, என்றார்.

No comments:
Post a Comment