Monday, August 22, 2011

த்ரிஷா சம்மதம் :விஷாலின் நெடுநாள் ஆசை நிறைவேறியது!!!

Monday, August 22, 2011
சத்யம் படத்தில் இருந்தே த்ரிஷாவுடன் ஜோடி சேர வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஷாலின் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது. ஆம்! விஷால் நடிக்கும் புதிய படத்தில், அவரது ஜோடியாக நடிக்க த்ரிஷா சம்மதித்து விட்டாராம். அம்மா மாப்பிள்ளை பார்த்துவிட்டார், இதோ விரைவில் திருமணம் என்றெல்லாம் செய்திகளில் அடிபட்ட த்ரிஷா, மீண்டும் சினிமாவில் பிஸியாக ஆரம்பித்து விட்டார்.

தமிழில் அவர் புதிதாக கமிட் ஆகியிருக்கும் படத்தினை டைரக்டர் திரு இயக்கவுள்ளார். த்ரிஷா ஜோடியாக நடிப்பவர் நடிகர் விஷால். இந்தப் படம் முடிவானபோதே, ஹீரோயினாக த்ரிஷா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று விஷால் பிரியப்பட்டார். அவரை அணுகி கால்ஷீட் கேட்டனர். கதை முழுக்க கேட்ட திரிஷாவுக்கும் பிடித்து போனது. விஷால் ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே சத்யம் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க முதலில் த்ரிஷாவிடம்தான் கேட்டனர். அவர் மறுத்ததால் நயன்தாரா நடித்தார். தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை தற்போது விஷால் நடித்து வரும் வெடி என எல்லா படங்களுக்கும் த்ரிஷாவைதான் நாயகியாக நடிக்கும்படி கேட்டனர். ஆனால் விஷாலுடன் ஜோடி சேர அவர் விரும்பாததால் தவிர்த்து வந்தார். தற்போது மனமாற்றம் ஏற்பட்டு புதிய படத்தில் ஜோடி சேர சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment